28 வயதில் தற்கொலை; தூரிகையை நியாபகமிருக்கா - தந்தை கபிலன் உருக்கம்!

Kabilan
By Sumathi May 24, 2023 02:30 PM GMT
Report

கவிஞர் கபிலன் மகள் தூரிகையை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தூரிகை

கவிஞரும் பாடலாசிரியருமான கபிலன் 50 -க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

28 வயதில் தற்கொலை; தூரிகையை நியாபகமிருக்கா - தந்தை கபிலன் உருக்கம்! | Kabilan Writes A Post On Daughter Thoorigai

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த ஆண்டு, அவரது மகள் தூரிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூரிகை ஆடை வடிவமைப்பாளராகவும் எழுத்தாளராகவும் இருந்தார்.

தந்தை உருக்கம்

இவர் Being Women Magazine' எனும் இதழையும், 'The Label Keera' எனும் ஆடை வடிவமைப்பகத்தையும் நடத்தி வந்தார். அவருடைய திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின.

28 வயதில் தற்கொலை; தூரிகையை நியாபகமிருக்கா - தந்தை கபிலன் உருக்கம்! | Kabilan Writes A Post On Daughter Thoorigai

ஆனால் இவற்றில் எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. இந்நிலையில், கபிலன் தனது மகளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகள் தூரிகைக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள்! எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.