கொரோனாவின் விளைவு.. மூளையை பாதிக்கும் புதிய நோய், இவ்வளவு ஆபத்தானதா? - ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி!
கோவிட் தொற்றால் மூளையும் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நோய் தொற்று
உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவியதில் பலர் உயிரிழந்தனர். இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு பிறகு சரியானவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படும் என்று முன்னரே கூறினர். தற்பொழுது ஒரு புதிய நோயை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மருத்துவ அறிவியலில், இந்த நோய் ஆபத்தான நோய் என்று கூறப்படுகிறது.
மூளை கோளாறு முதல் முடி உதிர்தல் வரை, சரியான நேரத்தில் ஆண்களின் உற்சாகமின்மைக்கு கூட, கொரோனா வைரஸ் தான் காரணம். சமீபத்தில் நியூயார்க் மருத்துவமனையில் 62 வயதான நபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். நடப்பது அவருக்கு சிரமமாக இருந்தது, அதற்கு வேகமாக அதிகரித்து வந்த டிமென்ஷியா என்ற நோயும் காரணமாக இருந்தது.
மூளைக்கு பாதிப்பு
இந்நிலையில், அவரது மூளையில் பல்வேறு பிரச்னைகள் வந்தது, அதில் நரம்பியல் பிரச்னைகள் அதிகம் காணப்பட்டது. அதேசமயம் அவரது மூளையில் ப்ரியான் என்ற கொடிய நோய் இருப்பதாக கூறப்படுகிறது. அது முன்னர் CT மற்றும் MRI ஸ்கேன்களில் நோயின் எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. இந்த சோதனை பலமுறை செய்யப்பட்டது.
உணவு உண்பது அவருக்கு சிரமமானது, அதனால் அவருக்கு உணவு குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டது. இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆறு வாரங்களில் இறந்தார். அவரது மூளை மாதிரிகளை ஆய்வு செய்ததன் மூலம் ப்ரியான் நோய் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நோயில், ஒரு நோய்க்கிருமி மூளைக்குள் நுழைந்து செல் வளர்ச்சியை சிதைக்கிறது. இதன் விளைவாக, மூளையின் செயல்பாட்டில் அசாதாரண அறிகுறிகள் தோன்றும். இந்த நோய்க்கிருமி கோவிட் உடன் தொடர்புடையது என்று விஞ்ஞானிகள் நினைக்கின்றனர். இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.