ஒமைக்ரான் கொரோனா தொற்று அச்சுறுத்தல் – உலகம் முழுவதும் 4,000 விமானங்கள் ரத்து

world flights Cancel
By Nandhini Dec 25, 2021 04:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் 4,000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, பலரும் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள வணிக விமான நிறுவனங்கள் கிறிஸ்துமஸ் வார இறுதியில் 4000 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏனென்றால், வேகமாக ஒமைக்ரான் வகை கொரோனா நோய்த்தொற்று பெருகி வருவதால் தீவிர அலையானது, தற்போது விடுமுறை பயணம் மேற்கொள்ளும் பயணிகள் மத்தியில் அச்சத்தையும், துயரத்தையும் உருவாக்கி இருக்கிறது.

குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்திருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் 4 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .இதனால், விடுமுறை பயணம் மேற்கொள்ள இருந்த லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விமானக் கண்காணிப்பு இணையதளமான https://uk.flightaware.com/ல் இயங்கும் கணக்கின்படி, உலகளவில் நேற்று (வெள்ளிக்கிழமையன்று) குறைந்தபட்சம் 2,366 விமானங்களை ஏர்லைன் கேரியர்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், மேலும் 9,000 விமானங்கள் தாமதமாக வந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் 1,616 கிறிஸ்துமஸ் தின விமானங்கள் நிறுத்தப்பட்டதாகவும், மேலும் 365 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வாரம் இறுதியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து விமானங்களில் அதிகமானவை அமெரிக்காவிற்குள்ளும் மற்றும் வெளியேயும் வணிக ரீதியான விமானப் போக்குவரத்து என்று FlightAware தரவு கூறுகின்றன. அதன்படி, அமெரிக்காவிற்குள், உள்ளே அல்லது வெளியே மொத்தம் 683 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.