7 மாத கர்ப்பிணியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமியார் - பின்புலம் என்ன!
7 மாத கர்ப்பிணியை அவரது மாமியார் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
7 மாத கர்ப்பிணி
டெல்லி, பவானா பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பு(26). 7 மாத கர்ப்பிணியான இவர் தீக்காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில், "அந்த பெண் குளிருக்காக பற்றவைக்கப்பட்ட நெருப்பின் அருகே அவரது கணவருடன் அமர்ந்துள்ளார். அப்போது, அவர்களுடன் இருந்த ஒருவர், நெருப்பு அணையும் தருவாயில் பெயிண்ட் தின்னரை அதில் வீசியுள்ளார். இதனால், அருகில் பெண்ணின் முகம், கைகால்களில் நெருப்பு பற்றியுள்ளது.
தீ வைத்த மாமியார்?
இதில், அவருடைய கணவர் வீர்பிரதாப்பிற்கும் காயமாகியுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்ணின் குடும்பத்தினர் மாமியாரால்தான் குஷ்புக்கு காயம் ஏற்பட்டிருக்கும் என அவரது சகோதரர் சந்தீப் தெரிவித்துள்ளா். இந்த விவகாரம் குறித்து, மகளிர் ஆணையம் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில். "7 மாத கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் மாமியார் பவானாவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். அந்த பெண் பலத்த தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி பாதிக்கப்பட்டவருக்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இதுகுறித்த விசாரணை நடைப்பெற்று வருகிறது.