55 வயதில் 5வது திருமணம்.. கடுப்பில் தடுத்து நிறுத்திய 7 பிள்ளைகளும் மனைவிகளும்!
ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் தந்தையின் திருமணத்தை 7 பிள்ளைகளும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
ஐந்தாவது திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் உள்ள ஏழு பிள்ளைகள் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துகொள்ளும் தந்தையின் முயற்சியை தடுத்துள்ளனர். இந்த ஏழு பிள்ளைகளின் தந்தை 55 வயதான ஷாபி அகமது. இவர் ஐந்தாவது திருமணம் செய்து கொள்வதாக இருப்பதை அறிந்ததும்,
ஏழு குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் திருமண இடத்திற்குள் நுழைந்து திருமணத்தை தடுத்துள்ளனர். திருமண மண்டபத்தில் அந்த குழந்தைகள் தாங்கள் யார் என்பதும் குறித்தும், தங்களது தாய்மார்கள் குறித்த அடையாளத்தை மணப்பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்தபோது,
7 பிள்ளைகள்
அங்கு மிகப்பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. இதையடுத்து அந்த இடத்தில் கூடியிருந்த ஏராளமான மக்கள், திருமணத்திற்கு தயாராக இருந்த மணமகனை சரமாரியாக தாக்கியதால், மணமகன் அந்த இடத்தை விட்டு ஓட முயற்சி செய்துள்ளார்.
Uttarpradesh: Rest of the wives was sent on #Haj Pilgrimage, Father of 7 children from 2nd wife, was going to do 5th Nikaah (marriage): In Sitapur, the 2nd wife along with the children ßeat up the husband, the new bride absconded.
— Ashwini Shrivastava (@AshwiniSahaya) September 1, 2022
बाकी पत्नियों को हज यात्रा पर
+@Uppolice pic.twitter.com/oI0xQRrw1J
இதுகுறித்து கோட்வாலி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தேஜ் பிரகாஷ் சிங் கூறுகையில், "இந்த சம்பவம் குறித்து மணமகனின் குழந்தைகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பிறகு, நாங்கள் சம்பவ இடத்திற்கு சென்று குற்றவாளியை கைது செய்தோம்" என்றார்.
புகார்
அந்த நபர் முதல் மற்றும் இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களை விவாகரத்து செய்ததாகவும், மூன்றாவது மற்றும் நான்காவது திருமணம் செய்து கொண்டவர்களை ஒரு சில காரணங்களை கூறி புத்திசாலித்தனமாக பிரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.
தந்தை மாதாந்திர செலவுக்கு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், அவரது ஐந்தாவது திருமணம் குறித்து அறிந்ததும், நடவடிக்கை எடுக்க முடிவு செய்ததாகவும் அந்த ஏழு குழந்தைகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்