ஆன்லைன் ஆர்டர் உணவு ப்ரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்விக்கி (Swiggy) - இனி இதுக்கும் கட்டணம்..!

Swiggy
By Thahir Apr 30, 2023 06:39 AM GMT
Report

ஆன்லைன் உணவு நிறுவனமான ஸ்விக்கி ப்ளாட்பார்ம் கட்டணத்தை நிர்ணயித்துள்ள சம்பவம் ஆன்லைன் உணவு ப்ரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விக்கி கட்டணம் விதிப்பு

இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி இதுவரை உணவுக்கான கட்டணம் மற்றும் டெலிவரி கட்டணத்தை மட்டும் நிர்ணயித்து வந்தது.

இதையடுத்து இந்த உணவு டெலிவரி செயலிகள் மூலம் நகரப்பகுதிகளுக்கு பெரும்பாலான உணவு ஆர்டர்களை வாடிக்கையாளர்கள் செய்து வருகின்றனர்.

ஸ்விக்கி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் இனி உணவு ஆர்டர் செய்ய ஒரு ஆர்டருக்கு ரூ.2 ப்ளாட்ஃபார்ம் கட்டணமாக நிர்ணயித்துள்ளது. முதற்கட்டமாக ஹைதராபாத்,பெங்களூர் நகரங்களில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

Service charge for ordering food on Swiggy

உணவு ப்ரியர்கள் அதிர்ச்சி 

இதையடுத்து சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் இது விரிவாக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் இது போன்ற கட்டணங்களை மற்ற ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்கள் விதிக்க வாய்ப்பு உள்ளதால் உணவு ப்ரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.