ஊருக்குள் சுற்றித்திரியும் சீரியல் கில்லர் - 6 மாதங்களில் 6 பெண்கள், மர்ம கொலை!

Attempted Murder United States of America
By Vinothini Jun 05, 2023 04:07 PM GMT
Report

 6 மாதங்களில் 6 இளம்பெண்களை மர்மமான முறையில் இறந்து, மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர்ம கொலை

அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் போர்ட்லாந்து என்ற நகரம் உள்ளது.

அங்கு கடந்த பிப்ரவரி 19-ம் தேதி அன்று தென்கிழக்கு போர்ட்லாந்து பகுதியில் 22 வயதான கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டு எடுக்கப்பட்டது.

serial-murder-6-women-dead-in-6-months

அதன்பின் ஏப்ரல் 8ஆம் தேதி அன்று கிளார்க் கவுன்டி என்ற பகுகியில் ஜோனா ஸ்பீக்ஸ் என்ற பெண்ணின் உடல் சிதைந்து காணப்பட்டது.

பின்னர் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொலம்பியா ரிவர் ஹைவேயில் 24 வயது சாரிட்டி லின் என்ற பெண்ணின் உடல், மற்றும் லெண்ட்ஸ் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின் உடல்.

தொடர்ந்து, கடைசியாக ஏப்ரல் 30-ம் தேதி அன்று 31 வயதான பிரிட்கெட் லியான் என்ற பெண்ணின் உடல் நார்த்வெஸ்ட் போல்க் கவுன்டி பகுதியில் எடுக்கப்பட்டது.

சீரியல் கில்லர்

இந்நிலையில், தொடர்ந்து இளம்பெண்களின் உடல் சிதைந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரே பகுதிகளில் உடல்கள் கிடந்துள்ளது.

இதனை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

serial-murder-6-women-dead-in-6-months

இவ்வாறான தொடர் கொலைகளின் காரணமாக இதனை சீரியல் கில்லராக இருக்கலாம் என்ற சந்தேகத்தில், சீரியல் கில்லர் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

அடுத்து அடுத்து 6 மாதங்களில் 6 பெண்கள் கோரமாக கொலை செய்யப்பட்டு மரணமடைந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.