பழனி அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டு யானை
பழனி அருகே இறந்த கிடந்த பெண் காட்டுயானையின் உடலை குட்டியானை சுற்றி சுற்றி வந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் பழனியை அடுத்துள்ள பாலாறு - பொருந்தலாறு அணையை ஒட்டியுள்ள ஜீரோ பாயின்ட் வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானை இறந்து கிடந்த யானையை பரிசோதனை செய்ததில் பெண் யானை என்று தெரியவந்தது.
மேலும் இறந்து கிடந்த பெண் யானையின் உடலின் அருகே மூன்று மாத குட்டி யானை ஒன்று சுற்றி சுற்றி வந்தது. கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
அப்போது யானை இறந்து மூன்று நாட்களுக்கு மேலாகி இருக்கலாம் என்று தெரியவந்தது. மேலும் இறந்து கிடந்த பெண் யானையின் குட்டியானையின் தாயாக இருக்கலாம் என்றும் தெரியவந்தது.
தொடர்ந்து யானையின் உடலை வனப் பகுதியிலேயே வனத்துறையினர் புதைத்தனர். யானையின் இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.