பெண்களை பார்த்தால் முத்தம் கொடுக்கும் முதியவர் - சீரியல் கிஸ்ஸர், வழங்கப்பட்ட விசித்திர தண்டனை!
பெண்களை பார்த்தாலே முத்தம் கொடுக்கும் சீரியல் கிஸ்ஸர் முதியவரால் பரபரப்பட்டு ஏற்பட்டுள்ளது.
முதியவர்
இங்கிலாந்து நாட்டில் விசித்திர வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதில் மிர்சா முகமது சயீத் என்ற 64 வயதான முதியவர் 16 வயது சிறுமி உட்பட பல பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார்.

இவர் காலையிலேயே கையில் கேமராவை எடுத்துக்கொண்டு சென்றுவிடுவார். அங்கு வழியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்களிடம் சென்று தன்னை புகைப்படம் எடுத்து தருமாறு கூறுவார்.
அவர்கள் எடுத்து கொடுத்ததும், அவர்கள் அருகில் சென்று சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்று கூறுவார். அப்பொழுது அவர்கள் அருகில் வரும்பொழுது இழுத்து முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
விசித்திர தண்டனை
இந்நிலையில், இவர் 7 பெண்களிடம் இவ்வாறான சீண்டலில் ஈடுபட்டதாக அவரே ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் புகாரின் பெயரில் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அதில் அவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

அதிலிருந்து தப்பும் வகையில் அவரே வித்தியாசமான தண்டனையை தேர்ந்தெடுத்தார். அதில் இவர், இரவு 7 மணி முதல் காலை ஏழு மணி வரை வீட்டுக் காவலில் இருப்பார். மின்னணு சாதனம் மூலம் அவர் கண்காணிக்கப்படுவார். 189 நாட்கள் வீட்டுச் சிறையில் இருப்பார்.
சமூகப் பணிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஈடுபட வேண்டும். இவரை ஒருவர் தொடர்ந்து மேற்பார்வை செய்வார். அதேபோல் சம்பளம் வாங்காமல் 252 மணி நேரம் வேலையில் அவர் ஈடுபட வேண்டும். இதனை ஏற்று இவர் சிறை தண்டனையில் இருந்து தப்பினார்.