ஆண்கள் தான் குறி.. லிப்ட் தந்து தூக்கும் 'சீரியல் கில்லர்' - போலீசாரை மிரள வைத்த சம்பவம்!
11 ஆண்களை படுகொலை செய்த சீரியல் கில்லரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சீரியல் கில்லர்
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம் சரூப்(33). இவர் எப்போதுமே தேடித்தேடி சென்று லிப்ட் வேண்டுமா? என்று கேட்டு வாகனத்தில் ஏற்றிக் கொள்வார். இப்பொது வரை இவர் நல்ல மனிதர் தேடிச் சென்று உதவி செய்கிறார் என்று நீங்கள் எண்ணினால் அதான் தவறு..
ஏனென்றால் அவர் வாகனத்தில் ஏற்றிய நபரை ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு அழைத்துச் செல்வார் ராம் சரூப். அங்கு அசந்த நேரத்தில் பின்னந் தலையில் நங்கென இரும்புத்தடியால் தாக்கி கொலை செய்வது தான் இவரது ஸ்டைல்.
தலையில் அடிபட்டும் சாகவில்லை என்றால் துனியால் கழுத்தை நெரித்து கொன்றுவிடுவாராம். சிலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின் அவர்களிடமிருக்கும் வாட்ச், செயின், பர்ஸ் என அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு
ஆண்கள் தான் குறி..
அங்கிருந்து தடயமே இல்லாமல் தப்பி செல்வது இவருக்கு வழக்கம். அண்மையில் மோத்ராவில் உள்ள சுங்கச்சாவடி அருகே டீ விற்று வந்த 37 வயது நபரை கொலை செய்திருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணையில் களமிறங்கிய போலீசார் ரூப்நகர் மாவட்டத்தில் வைத்து ராம் சரூப்பை கைது செய்தனர். பிடிப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையில், தான், சுமார் 10பேரை கொன்றிருப்பதாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
இவற்றில் 5 கொலை சம்பவங்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய கொலைகளைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது. கூலித் தொழிலாளியாக பணிபுரிந்த ராம் சரூப் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில், குடிபோதையில் தான் குற்றங்களை செய்ததாக அவர் ஒப்புக்கொண்ட நிலையில் கொலை செய்த பிறகு அவர்களின் பாதங்களைத் தொட்டு, வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டதாக? அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.