பெண்களை கொன்று சடலங்களுடன் உல்லாசம் - பதைபதைக்க வைக்கும் சைக்கோ சம்பவம்!
திரைப்பட பாணியில் நபர் ஒருவர் பெண்களை கொன்று சடலங்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
மனிவியுடன் தகராறு
ஆந்திரா, அனகாபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்பாபு(45). ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகள் கடந்த நிலையில், குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.
அந்த விரக்தியில் இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனையே வாடிக்கையாக இருந்துள்ளது.
தகாத உறவு
தொடர்ந்து, மனைவியை சந்தேகப்பட தொடங்கினார் ராம்பாபு. அக்கம்பக்கத்தில் உள்ள ஆண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி மனைவியை துன்புறுத்த ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் வீட்டின் உரிமையாளருடன் தனது மனைவிக்கு தகாத உறவு இருப்பதாக உறவினர்களிடம் கூறிய ராம்பாபு,
இனி அவருடன் தன்னால் வாழ முடியாது எனக் கூறினார். இதனால் 4 ஆண்டுகளுக்கு முன்பு ராம்பாபுவின் மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். மேலும், தான் பணிபுரியும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தனக்கு பல ஆண்டுகளாக கிடைக்க வேண்டிய கமிஷன் தொகையை தராமல் ஏமாற்றியதை ராம்பாபு சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தார்.
பணிநீக்கம்
இதுகுறித்து தனது முதலாளிகளிடம் கேட்ட போது அவரை அவர்கள் பணிநீக்கம் செய்தனர். இந்நிலையில், மனைவி தன்னை ஏமாற்றியதால் அவருக்கு பெண்கள் மீது ஒருவித வெறுப்பும், கோபமும் உருவானது.
இதையடுத்து பெண்களை கொலை செய்ய அவர் முடிவு செய்து அதன்படி, கடந்த 2 ஆண்டுகளாக விசாகப்பட்டினத்தில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை கொலை செய்துள்ளார்.
தொடர் கொலை
அதோடு இல்லாமல் அந்தப் பெண்களின் சடலங்களுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளார். இதுபோல 6 பெண்களை அவர் கொலை செய்திருக்கிறார். அதனையடுத்து, கடந்த மாதம் தான் கொலை செய்த பெண்ணின் வீட்டை நோட்டம் பார்ப்பதற்காக ராம்பாபு நேற்று சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு மஃப்டியில் இருந்த போலீஸாருக்கு அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டது. அதனால் அவரை பிடித்து விசாரித்த போது, பெண்களை கொலை செய்து வந்ததை ஒப்புக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, போலீஸார் ராம்பாபுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.