40 பெண்களுடன் உல்லாசம் - ஆசிரியருக்கு வலைவீச்சு!
கர்நாடகாவில் மாணவிகள் உட்பட 40 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அரசு பள்ளி ஆசிரியர்
கர்நாடகா ராய்ச்சூர் மாவட்டம் சிந்தனூர் தாலுகா சிங்கபுரா கிராமத்தில் அரசு உயர் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியராக பணியாற்றி வருபவர் முகமது அசாருதீன்.
இவர் கொப்பல் மாவட்டம் கரடகி நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில், முகமது அசாருதீன், தன்னுடன் பணியாற்றும் ஆசிரியை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
ஆபாச வீடியோ
ற்போது இதுதொடர்பான ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து முகமது அசாருதீன் தலைமைறைவாகி விட்டார்.
மேலும் இவர், தன்னிடம் டியூசன் படிக்க வரும் மாணவ மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே, ஆசிரியர் முகமது அசாருதீனை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும்,
பாலியல் தொல்லை
அவரை போலீசார் கைது செய்து உரிய விசாரணை நடத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கரடகி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமது அசாருதீனை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், 40-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும்,
பலரை மிரட்டி ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
நிறைமாத கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை.. நடந்தது என்ன?