பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை உயிரிழப்பு - சோகத்தில் சினத்திரை பிரபலங்கள்..!
சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி (70) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார்.
சீறுநீரக தொற்றால் அவதி
10க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும், சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா, போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை விஜயலட்சுமி.

70 வயதாகும் இவர் இன்று காலை துாக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
துாக்கத்திலேயே உயிர் பிரிந்தது
மேலும் சில தினங்களுக்கு முன்பு பாத்ரூமில் இருந்து வழுக்கி விழுந்து..தலையில் பலமாக அடிபட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், சோர்வாக இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை துாக்கத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் திடீர் மரணம் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர்களை உயிருடன் பிடித்திருந்தால் வடக்கில் மீண்டும் யுத்தம்: சரத் பொன்சேகா வாக்குமூலம் IBC Tamil
துமிந்த திசாநாயக்கவுக்கு எதிரான தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி வழக்கு : ஜனவரியில் விசாரணை IBC Tamil