பிரபல நடிகையுடன் காதலில் விழுந்த பாரதி கண்ணம்மா ஹீரோ? - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத் பிரபல நடிகையுடன் காதலில் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரை, பெரியதிரை எதுவாக இருந்தாலும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்வது என்பது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஒரு நிகழ்வாகும். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத்தும், ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வரும் நடிகை விஜே அர்ச்சனாவும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அருண் பிரசாத் மேயாத மான் திரைப்படத்தில் வைபவ் நண்பராக நடித்திருந்தார். சின்னத்திரையில் அவரது முதல் பயணமே பாரதி கண்ணம்மா சீரியல் தான். இதில் டாக்டர் கேரக்டரில் அவர் நடித்து வருகிறார்.
இதனிடையே விஜய் டிவி விருதுகள் வழங்கும் விழாவில் கடந்த வருடம் சிறந்த கதாநாயகன் என்ற விருதை அருண் பிரசாத் பெற்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த நடப்பாண்டுக்கான விருது விழாவில் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து கொண்டிருக்கும் அர்ச்சனாவிற்கு விருது கிடைத்தது.
அப்போது அவரை தொகுப்பாளர்கள் டாக்டர், பாரதி உள்ளிட்ட வார்த்தைகளால் கேள்விகள் கேட்டு கிண்டல் செய்தார்கள். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனா ஒன்றாக இருந்த வீடியோக்கள் வெளியானதாக சொல்லப்படுகிறது. இதனை வைத்து அருண் பிரசாத்தும், அர்ச்சனாவும் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் காதலை இருவரும் இதுவரை உறுதி செய்யவில்லை.