பிரபல சீரியல் நடிகை வீட்டில் டபுள் சந்தோஷம் - வைரலாகும் புகைப்படம்!
சீரியல் நடிகைக்கு இரட்டை குழந்தைகள் பிறந்த புகைப்படத்தை பகிர்ந்தது வைரலாகி வருகிறது.
பிரபல சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா பந்தேகர். இவரது நிஜ பேரை விட இந்த சீரியலில் இவருக்கு இருந்த சந்திரா என்ற பெயர் தான் அதிகமானோருக்கு தெரியும்.
இவர் தமிழ் சினிமாவில் ’ஆழ்வார்’ திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூலோகம் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு மகள் என்ற சீரியலின் மூலமாக அறிமுகமாகி அதற்குப் பிறகு சந்திரலேகா, நிலா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார்.
ட்வின்ஸ்
இந்நிலையில், கடந்த ஆண்டு திருமணமான இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அதில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை, இதனை இணையத்தில் பகிர்ந்த அவருக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது. மேலும், அவர் அந்த பதிவில், "கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளனர்.
மால் மற்றும் ஸ்வப்னா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இரட்டைகளில் ஒருவர் ஆண் குழந்தை மற்றொரு பெண் குழந்தை. ஆனால் இவர்கள் இருவரும் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் அல்ல. மேலும் கடவுள் தந்த இந்த வரத்திற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், எனக்கு வாழ்த்து தெரிவித்து வரும் அனைவருக்கும் நன்றி" என்று தெரிவித்திருந்தார்.