திருமணமான ஒரே வருடத்தில் கணவர் மரணம்.. பாரதிகண்ணமா சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட சோகம்!
பிரபல சீரியல் நடிகையின் கணவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீரியல் நடிகை
சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. இதையடுத்து வாணி ராணி, கல்யாணப் பரிசு, பொன்னூஞ்சல் போன்ற தொடர்களில் நடித்திருந்த இவர் சில படங்களிலும் சைடு ரோலில் நடித்துள்ளார்.
ஸ்ருதி சண்முகப்பிரியா கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிமான ரோலில் நடித்திருந்தார்.
உயிரிழப்பு
இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் ஒரு பாடி பில்டர் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் வென்றவர். தற்பொழுது இவரது கணவர் திடீரென மாரடைப்பால் காலமாகியுளார். இவரின் மறைவுக்கு அதிர்ச்சி அடைந்த பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.