மோசமான சூழ்நிலை; பிரிந்து விடலாம்னு முடிவு - ஸ்ரீஜா சொன்ன அந்த வார்த்தை!
ஸ்ரீஜா மற்றும் செந்தில் தம்பதி அவர்களது வாழ்க்கை பயணம் குறித்து பேசியுள்ளனர்.
செந்தில்-ஸ்ரீஜா
தமிழகத்தின் முன்னணி RJ வாக வலம் வருபவர் செந்தில். தமிழ் சினிமாவில், இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மிர்ச்சி செந்தில்

தொடர்ந்து எவனோ ஒருவன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.
குறிப்பாக பிரபல தொலைக்காட்சியில், ஹிட் அடித்த சீரியலான சரவணன் மீனாட்சி மூலம் கதாநாயகனாக அனைவரது மனதிலும் தனி இடம் பிடித்தார். அதில் நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீஜா. இருவரின் கெமிஸ்ட்ரியும் அவர்களை திருமணம் வரை கொண்டு சென்றது. இவர்களுக்கு ஒரு ஆன் குழந்தை உள்ளது.
பர்சனம் பக்கம்
இந்நிலையில், தங்களுடைய 10வது வருட திருமண நாளை கொண்டாடிய செந்தில் மற்றும் ஸ்ரீஜா அளித்த பேட்டி ஒன்றில், எங்களுக்குள் அவ்வளவு சண்டைகள் நடந்து இருக்கிறது. மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். இப்போதும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால் மகன் பிறந்து விட்டதால் சண்டைக்கு அதிகமான நேரம் கிடைக்கவில்லை. நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எல்லாம் மிகவும் மோசமான சண்டை போட்டு இருக்கிறோம். அதனால் சில முறை பிரிந்து விடலாமா? என்று கூட சில முறை யோசித்து இருக்கிறோம்.
ஆனால் அதனை கடந்து மீண்டும் அவரிடம் பேச வேண்டும் என்று எனக்குள் தோன்றும். என்னை பொருத்தவரை அதை நான் ஒரு மேஜிக் என்று சொல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    