8 வருடத்திற்கு பின்.. சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் - ஸ்ரீஜா சொன்ன குட்நியூஸ்!

Pregnancy Serials Viral Photos Senthil
By Sumathi Oct 03, 2022 09:24 AM GMT
Report

சரவணன் மீனாட்சி செந்தில், மனைவியின் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

சரவணன் மீனாட்சி

தமிழகத்தின் முன்னணி RJ வாக வலம் வருபவர் செந்தில். தமிழ் சினிமாவில், இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான மிர்ச்சி செந்தில் தொடர்ந்து எவனோ ஒருவன்,

8 வருடத்திற்கு பின்.. சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் - ஸ்ரீஜா சொன்ன குட்நியூஸ்! | Saravanan Meenatchi Fame Senthil Sreeja Pregnant

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களிலும் முன்னணி கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். மேலும், சின்னத்திரையிலும் கலக்கி வருகிறார்.

 வளைகாப்பு  ஃபோட்டோஸ்

குறிப்பாக பிரபல தொலைக்காட்சியில், ஹிட் அடித்த சீரியலான சரவணன் மீனாட்சி மூலம் கதாநாயகனாக அனைவரது மனதிலும் தனி இடம் பிடித்தார். அதில் நாயகியாக வலம் வந்தவர் ஸ்ரீஜா. இருவரின் கெமிஸ்ட்ரியும் அவர்களை திருமணம் வர கொண்டு சென்றது.

8 வருடத்திற்கு பின்.. சரவணன் மீனாட்சி புகழ் செந்தில் - ஸ்ரீஜா சொன்ன குட்நியூஸ்! | Saravanan Meenatchi Fame Senthil Sreeja Pregnant

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ஸ்ரீஜாவுக்கு வளைகாப்பு போட்ட புகைப்படத்தை செந்தில் மகிழ்ச்சியாக அவரது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.