24 மணி நேரமும் அது தான் வேணும்; 10 வயது வித்தியாசம் - கதறும் பிரபல சீரியல் நடிகை!

Serials Marriage Samyuktha
By Sumathi May 17, 2023 04:58 AM GMT
Report

சின்னத்திரை நடிகை சம்யுக்தா கணவரை பிரிந்த காரணம் குறித்து தெரிவித்துள்ளார்.

காதல் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் ஒன்றாக நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

24 மணி நேரமும் அது தான் வேணும்; 10 வயது வித்தியாசம் - கதறும் பிரபல சீரியல் நடிகை! | Serial Actress Samyukta Reacts Husband Allegations

இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து சம்யுக்தா இன்ஸ்டா லைவில் விளக்கம் அளித்துள்ளார். அதில், எனக்கும் விஷ்ணுகாந்த்க்கும் பத்து வருடம் வயது வித்தியாசம் இருக்கிறது. எனக்கு 22 வயது தான் ஆகிறது. இப்போது திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம்.

1 மாதத்தில் பிரிவு

திருமணத்திற்கு பிறகு எங்க அப்பா வீட்டுக்கு வருவதால் தான் எங்களுக்கு பிரச்சனை என்று பேட்டியில் கூறி இருக்கிறார். அவருக்கு 24 மணி நேரமும் ரொமான்ஸ் வேணும். அவர் அப்படியே இருப்பதால் எங்க அப்பா வருவதால் அவருக்கு டிஸ்டர்பன்ஸாக இருக்கிறதா? என்று கேட்டிருக்கிறார்.

24 மணி நேரமும் அது தான் வேணும்; 10 வயது வித்தியாசம் - கதறும் பிரபல சீரியல் நடிகை! | Serial Actress Samyukta Reacts Husband Allegations

நான் எல்லாமே விஷ்ணுகாந்துக்காக தான் சகிச்சுக்கிட்டு வாழ்ந்தேன். ஆனால் நான் நினைச்ச மாதிரி அவர்தான் இல்லை ஒவ்வொருமுறை சண்டை வரும்போதும் நான் தான் கெஞ்சி அவரிடம் மன்னிப்பு கேட்டு அழ வேண்டும். பிறகு தான் அவர் பேசுவார். நான் இடுப்பு தெரிகிற மாதிரி புடவை கட்டவே மாட்டேன்.

ஆனாலும் ஒருமுறை டான்ஸ் ஆடி வீடியோ போடும்போது கூட இடுப்பு தெரிஞ்ச இருக்கிறது. பிறகு வீடியோவை அந்த வீடியோவை நானே டெலிட் செய்து விட்டேன். அப்படிப்பட்ட பெண்ணை என்னை அந்த டிரஸ் போடாத இந்த டிரஸ் போடாதே என்று கட்டாயப்படுத்துகிறார்கள் என வேதனை தெரிவித்துள்ளார்.