எனக்கு பிரச்சனை இருக்கு..அதனால் தான் அப்படி - மனம் நொந்த நடிகை ரேஷ்மா!

Reshma Pasupuleti
By Sumathi Jun 16, 2023 05:30 PM GMT
Report

உருவ கேலி குறித்த கமாண்டுகளுக்கு நடிகை ரேஷ்மா வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகை ரேஷ்மா

தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வருகிறார்.

எனக்கு பிரச்சனை இருக்கு..அதனால் தான் அப்படி - மனம் நொந்த நடிகை ரேஷ்மா! | Serial Actress Reshma Explanation Of Body Weight

இந்நிலையில், ரேஷ்மா தன்னுடைய இன்ஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ருவகேலி என்பதை பலரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கலாம். ஆனால் அதை கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்க மாட்டீங்களா?

வேதனை

இப்போ உள்ள சூழ்நிலையில் சர்ஜரி எல்லாம் பெரிய விஷயமே இல்லை. நடிகைகள் நாங்க பண்றத விட சாதாரண மக்கள் கூட அதிகமாக சர்ஜரி பண்ணிக்கிட்டு இருக்காங்க. ஆனால் அது பற்றி வெளியே தெரியவில்லை எனக்கு பிடிச்ச மாதிரி நான் இருக்கிறேன். அவ்வளவுதான் எனக்கு உடம்புல சில பிரச்சினை ஏற்பட்டது.

எனக்கு பிரச்சனை இருக்கு..அதனால் தான் அப்படி - மனம் நொந்த நடிகை ரேஷ்மா! | Serial Actress Reshma Explanation Of Body Weight

நான் ரொம்ப பிசியாகவே நடிச்சிட்டு இருக்கேன். தூங்குற நேரம் ரொம்பவே குறைவு. தொடர்ந்து ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் போய்கிட்டு இருக்கிறதுனால என்னால தூங்க கூட முடியல. அதனாலயே எனக்கு உடம்பு கூடிடுச்சி அதை வீட்டில் இருந்து சரி செய்யற அளவிற்கு எனக்கு இப்போதைக்கு நேரம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.