ரசிகரை கல்யாணம் பண்ண ரெடி.. ஆனால், - பிரபல சீரியல் நடிகை கண்டிஷன்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
ரசிகரை கல்யாணம் பண்ணிக்க ரெடி என ரேஷ்மா கண்டிஷன் வைத்துள்ளார்.
ரேஷ்மா
தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தன் மூலமாக பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுப்புலேட்டி. தொடர்ந்து சீரியல்களிலும், படங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கிய லட்சுமி தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தின் மூலமாக மக்கள் மத்தியில் தனகென தனி இடத்தை பிடித்துள்ளார்.
பளீச் பதில்
இந்நிலையில், ரசிகர் ஒருவர் ரேஷ்மாவை திருமணம் செய்துக் கொள்ள கேட்டார். அதற்கு அவர், “கண்டிப்பா டா, ஆனால் அம்மா என்னை அனுமதிக்க மாட்டார். என்ன செய்வது??” என்றார். மற்றொருவர், கோபியாக நடிக்கும் சதீஷுக்கு என்ன ஆச்சு, அவர் உண்மையில் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறாரா எனக் கேட்டார்,
அதற்கு கோபி சீரியஸாக விலகினாரா எனக்குத் தெரியாது, பாக்கியலட்சுமி படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூலுக்கு செல்லும் போது கேட்டு சொல்கிறேன் என பதிலளித்தார்.