சிம்புவுக்கு திருமணமானால்தான் எனக்கும் அது நடக்கும் - சீரியல் நடிகை ஷாக் தகவல்!

Silambarasan Tamil TV Serials
By Sumathi Jun 17, 2024 09:15 AM GMT
Report

சிம்புவின் திருமணம் பற்றி சீரியல் நடிகை பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிலம்பரசன் தனது அசாத்திய திறமையால் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

simbu

40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சினிமாவில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அவருடைய திருமணம் குறித்த தகவலும் இணையத்தில் அவ்வபோது வைரலாவது வழக்கமான ஒன்று.

அதுக்கு நான் சரிபட்டு வரவே மாட்டேன் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

அதுக்கு நான் சரிபட்டு வரவே மாட்டேன் - ஸ்ருதிஹாசன் ஓபன்டாக்!

ரேமா தகவல்

பத்து தல படத்துக்கு பிறகு அவர் இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 48 படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார்.

இந்நிலையில் நாச்சியார்புரம், கல்யாணம் முதல் காதல்வரை, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரேமா அசோக்.

இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'சிம்புவுக்கு எப்போது திருமணம் நடக்கிறதோ அப்போதுதான் எனக்கும் திருமணம் நடக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.