போன் செய்து அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்.. நடுரோட்டில் பளார்னு ஒன்னு விட்டேன் - நடிகை ஓபன் டாக்!

Tamil Media Tamil TV Serials Tamil Actress
By Vinothini Aug 07, 2023 04:30 PM GMT
Report

நடிகை தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

சீரியல் நடிகை

தமிழ் சினிமாவில், பல சீரியல்களில் நடித்து வருபவர் மீனா வேமுரி. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். தற்போது இவர் 'இலக்கியா' என்ற தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலிலும் நடித்து வருகிறார்.

serial-actress-opens-about-her-experience

இவர் சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

வெளிப்படை பேட்டி

இந்நிலையில், அந்த பெட்டியில் தனது வாழ்க்கை குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "நேரடியாக யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியது இல்லை. ஆனால் சிலர் போன் செய்து பட வாய்ப்பு குறித்து பேசியதும், ஆனால் என்று இழுக்கும் போதே... நான் அவர்களை ஆப் செய்து விடுவேன்.

serial-actress-opens-about-her-experience

இந்த மாதிரி அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னா என்கிட்ட பேசாதீங்க என கூறி விடுவேன். உடனே அவர்களும் அப்படி எல்லாம் இல்ல மேடம், உங்களுக்கு கால் பண்றேன் என சொல்லிட்டு கால் கட் பண்ணிடுவாங்க அதுக்கப்புறம் போனே வராது" .

மேலும், "காரில் சென்று கொண்டிருக்கும், காரை நான் திருப்பியது சரி இல்லை என்பதால், என்னை ஓவர் டேக் செய்து இடிப்பது போல் நிறுத்தினார்.

நான் காரில் இருந்து இறங்கி அவர் கன்னத்தில் பளார் பளார்னு அறைந்துவிட்டேன். நான் போலீசுக்கு செல்லவேண்டும் என வற்புறுத்தினேன். இது ஒரு பிரேசனியே இல்ல, அவன் உயிர் பயத்தை காட்டியதால் அப்படி அறைந்தேன்" என்று கூறியுள்ளார்.