நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்வது தனிப்பட்ட விஷயம்... எனக்கும் நடந்தது - நடிகை ஓபன் டாக்!
பிரபல நடிகை தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகையான லதா ராவ் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மெட்டி ஒலி, செல்வி, திருமதி செல்வம் போன்ற பல மெகா சீரியல்களிலும் நடித்திருக்கிறார். மேலும், சில படங்களிலும் நடித்துள்ளார், இவர் நடிகர் ஜெயம் ரவி நடித்த தில்லாலங்கடி படத்தில் நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவர் சீரியல் நடிகரான ராஜ்கமல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லாரா, ராகா என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
பேட்டி
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சினிமாவில் இவருக்கு நடந்த அஜூஸ்ட்மென்ட் விஷயம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், "சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்கிறார்கள். இது மீடியா துறையில் மட்டும் இல்லை எல்லா துறையிலும் இருக்கிறது.

பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் பகிராமல் இருப்பதும் குறிப்பிட்ட அந்த நடிகைகளை பொறுத்தது. அட்ஜஸ்ட்மென்ட் விஷயத்தால் நானும் பல பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். அந்த இயக்குனர் மற்றும் படம் குறித்து பேச நான் விரும்பவில்லை" என்று கூறியுள்ளார். மேலும், இந்த பேட்டியை இவர் ஒரு வருடத்திற்கு முன்னரே அளித்திருந்தார்.
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil