திரையுலகினருக்கு போதைப்பொருள் சப்ளையா? - நடிகை மீனா கைது
போதைப்பொருள் வைத்துள்ளதாக சீரியல் நடிகை மீனா கைது செய்யப்பட்டுள்ளார்.
போதை பொருள்
போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், போதை பொருள் பழக்கத்திற்கு அடிமையாக வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வீடியோ மூலமாக கோரிக்கை வைத்தார்.
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறையும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மீனா கைது
இந்நிலையில் சின்னத்திரை நடிகை மீனா போதைப்பொருள் வைத்துள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் இருந்த மீனாவிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
சோதனையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை மீனாவிடமிருந்து கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சின்னத்திரை நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு மீனா போதைப்பொருள் சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியலில் மீனா நடித்து வருகிறார். இவர் டெடி உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். போதைபொருள் வைத்துள்ளதாக மீனா கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.