மோசமான வாழ்க்கை, பிடிக்காத உறவு; கணவரை பிரிய காரணம் - மனம் திறந்த ஹரிப்ரியா!
பெண்கள் உரிமை குறித்து பேட்டி ஒன்றில் ஹரிப்ரியா பேசியுள்ளார்.
ஹரிப்ரியா
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் நந்தினியாக நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலத்தை அடைந்துள்ளவர் நடிகை ஹரிப்ரியா.
இந்நிலையில், அவர் அளித்துள்ள அண்மை பேட்டி ஒன்றில், வாழ்க்கையில் கசப்பான மனிதர்களை சந்திக்கும் சூழ்நிலை வரும், அது அனைவருக்கும் வரும் மோசமான வாழ்க்கை, பிடிக்காத உறவு என அமையும். அதை தாண்டி தான் வந்தாக வேண்டும்.
பெண்கள் உரிமை
இனிமேலும் வரும் யாருக்கு தெரியும். அதை நாம் கடந்து நகர்ந்து செல்லவேண்டும், அதை கடந்து வரும் என மிகுந்த மன தைரியத்தோடு நாம் இருக்க வேண்டும் என்றார். எதிர்நீச்சல் சீரியலில் வருவது போல, குணசேகரன், கதிர் கதாபாத்திரம் போல நிஜ வாழ்க்கையிலும் பல பேர் இருக்கிறார்கள்.
அவர்களை எல்லாம் தாண்டித்தான் பெண்கள் வெளியில் வரவேண்டும். இது போன்ற நபர்கள் இருப்பதால் தான் நம்ம வாழ்க்கையில் நாம் எதையாவது செய்ய வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு பெண் சமம் தான் நான் என் இஷ்டத்திற்கு எதையாவது செய்வேன் என்று ஏட்டிக்கு போட்டியாக எதையும் செய்யாமல்,
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எனக்கு பிடித்ததை செய்யும் உரிமையைத் தான் நான் உண்மையான சம உரிமையாக பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.