எப்படி இடிப்பாங்க'னு நல்ல தெரியுமா..! யாரும் அட்வைஸ் பண்ண வேணாம்...ஹரிப்ரியா அதிரடி

Tamil Cinema Serials Tamil TV Serials
By Karthick Oct 04, 2023 03:44 PM GMT
Report

தனக்கு யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம் என பிரபல சின்னத்திரை நடிகை ஹரிப்ரியா தெரிவித்துள்ளார்.

ஹரிப்ரியா

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடராக ஒளிபரப்பாகி வருகின்றது. ஆணாதிக்கத்தை எதிர்க்கும் ஒரு குடும்பத்தின் பெண்களை கதைக்களமாக கொண்ட இந்த சீரியல் பல எபிசொட்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

actor-haripriya-says-she-dont-want-anyone-advice

இதில் நந்தியான நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலத்தை அடைந்துள்ளவர் நடிகை ஹரிப்ரியா. நீண்ட காலமாகவே தமிழ் சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் ஹரிப்ரியா இந்த தொடரின் மூலம் மேலும் புகழ்ச்சியையும், தனது நடிப்பின் மூலம் நல்ல வரவேற்பையும் ரசிகர்களிடத்தில் பெற்றுள்ளார்.

யாரும் அட்வைஸ் பண்ண வேண்டாம்

இந்நிலையில் அவரின் பேட்டி ஒன்று இணையத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. அதில், "தான் தனது வாழ்வில் பல கஷ்டங்களையும், ஏற்ற இறக்கங்களையும் சந்தித்துள்ளதாக குறிப்பிட்ட ஹரிப்ரியா, எந்த விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று ஒவ்வொன்றிலும் தானாகவே படிப்படியாக கற்றுக் கொண்டேன் என்றும் இங்கு சென்றால் இடிக்கும் அங்கு சென்றால் வலிக்கும் என்பதை தானே தெரிந்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

actor-haripriya-says-she-dont-want-anyone-advice

அந்த காரணங்களினால், தனக்கு எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என்று கேட்க்கொண்ட அவர், கஷ்டத்திலும் சந்தோஷத்திலும் தன்னை பார்த்துக் கொள்வேன் என்றார். அட்வைஸ் செய்பவர்கள் எனக்கு எந்த உதவியும் செய்வதில்லை" என்று காட்டமாக விமர்சனமும் செய்துள்ளார்.