அண்ணன் பாலியல் டார்ச்சர்; கணவனே அட்ஜெஸ்ட் செய்ய சொல்றாரு - கதறும் சீரியல் நடிகை!

Star Vijay Tamil TV Serials
By Sumathi Mar 11, 2024 04:05 AM GMT
Report

சீரியல் நடிகை தீபா கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகை தீபா

அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர், பிரியமான தோழி, ஆண்டாள் அழகர், பகல் நிலவு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தீபா.

serial actress deepa

இவர் கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, விக்ரம் வேதா, மோதலும் காதலும் சீரியல் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபுவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கணவரின் அண்ணன் மீது நடவடிக்கை எடுக்குமாறும், கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு சாய் கணேஷ் பாபுவுக்கும் எனக்கும் திருமணம் நடந்தது. என் கணவரின் தாயார் மற்றும் கணவரின் அண்ணன் நான் வேறு ஜாதி என்பதால் என்னை மிகவும் தரக்குறைவாக நடத்தினார்கள்.

இதை செய்யாமல் கடவுளை கும்பிட்டால் மட்டும் போதாது - சீரியல் நடிகை தீபா

இதை செய்யாமல் கடவுளை கும்பிட்டால் மட்டும் போதாது - சீரியல் நடிகை தீபா


நீதிமன்றத்தில் மனு

என்னிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு, என் கணவரை தூண்டிவிட்டு பிரச்சனை செய்தனர். எனக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 15 வயதில் ஒரு மகன் இருக்கிறான் அதை சொல்லியும் என்னை மோசமான வார்த்தையால் பேசி வருகின்றனர்.

அண்ணன் பாலியல் டார்ச்சர்; கணவனே அட்ஜெஸ்ட் செய்ய சொல்றாரு - கதறும் சீரியல் நடிகை! | Serial Actress Deepa About Husband Sexual Torcher

அதுமட்டுமில்லாமல், என் கணவரின் அண்ணன் ராமகிரிவாசன் என்னுடைன் நீ வரவேண்டும் என செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வருகிறார். நீ என்னுடன் வா, நான் உன்னை பார்த்துக் கொள்கிறேன், என் தம்பியை தொல்லை பண்ணாதே என்கிறார். இதுகுறித்து என் கணவரிடம் கூறினேன். அண்ணனிடம் அட்ஜெட் செய்து கொண்டால் தான், என்னுடன் நிம்மதியாக வாழ முடியும்.

என் குடும்பத்தில் வாழ முடியும் என்று என் கணவரே என்னை வற்புறுத்துகிறார். இப்போது எனக்கு ஆதரவாக இருப்பது என் அப்பா மட்டும் தான் அவருக்கும் இந்த பிரச்சனையால் எதாவது ஆகிவிடுமோ என்கிற பயம் இருக்கிறது.

கணவரின் அண்ணன் ராமகிரிவாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல இடத்தில் புகார் கொடுத்தும், அவர் பணத்தை கொடுத்து அனைவரையும் சரிகட்டி விடுகிறார். இதனால், எனக்கு யாரும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.