அந்த பையனுடன் நடுத்தெருவில் நின்னேன்; என் நீச்சல் குள Video.. - நடிகை தீபா கண்ணீர்!
யாருடைய ஆதரவும் இல்லாமல் நடு ரோட்டில நின்றேன் என்று நடிகை தீபா கணீர் மல்க பேசியுள்ளார்
நடிகை தீபா
அன்பே சிவம், அத்திப்பூக்கள், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தீபா. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு சில காரணங்களால் விவாகரத்து பெற்றார்.
இந்த தம்பதிக்கு 15 வயதில் ஒரு மகனும் உள்ளார். இதனையடுத்து கடந்த ஆண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியல்களில் தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய சாய் கணேஷ் பாபு என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் நடு ரோட்டில நின்றேன் என்று நேர்காணல் ஒன்றில் கணீர் மல்க பேசியுள்ளார்.
தீபா கூறியதாவது "எனக்கு 17 வயதில் திருமணம் நடந்தது, திருமணம் ஆன அடுத்த வருஷமே எனக்கு குழந்தை பிறந்து விட்டது. என் திருமண வாழ்க்கை நான் நினைத்தபடி இல்லை. என் 23வது வயதிலேயே என் திருமண வாழ்க்கை முடிந்துவிட்டது. அப்போ என் பையனுக்கு 5 வயசு தான். அவன் கையை பிடித்துக்கொண்டு எங்கே போவது என்று தெரியாமல் நடுத்தெருவில் நின்றேன்.
வேதனை
அந்த நேரத்தில் எதுக்குடா வாழனும் என்ற எண்ணம் வந்தது. என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் தப்பானவர்களாக இருந்தார்கள். எல்லாமே தப்பா இருந்ததால், எனக்கு அந்த எண்ணம் வந்தது.
ஆனால், அந்த நேரத்தில் எனக்கு தைரியம் கொடுத்தது என் பையன், அவனுக்காகத்தான் நான் இப்போது வரைக்கும் ஓடிக்கொண்டு இருக்கிறேன். சினிமாவிற்கு வந்து 18 வருஷம் ஆகிவிட்டது, இப்போது தான் நல்ல கதாபாத்திரம் வருகிறது. இந்த இடத்திற்கு வர நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.
தனியாக ஒரு பெண்ணாக பல பிரச்சனைகளை நான் சந்தித்து இருக்கிறேன். யாரிடம் உதவி என்று கேட்டாலும், அவர்களின் பார்வை தவறாகத்தான் இருக்கிறது. நானும் என் மகனும் சேர்ந்து நீச்சல் குளத்தில் இருக்கும் வீடியோவை போட்டு இருந்தேன். அதைப்பார்த்துவிட்டு பலர் மோசமான கமெண்ட்டுகளை போட்டார்கள். அதைப்பார்த்து நான் கலங்கிவிட்டேன். இப்படிக்கூடவா மனுஷங்க இருப்பாங்க என்று தான் தோன்றுகிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.