முதன்முறையாக குழந்தையை உலகிற்கு காட்டிய செந்தில், ஸ்ரீஜா - வைரலாகும் புகைப்படம்!
சீரியல் நடிகரான செந்தில் தனது குழந்தையின் முகத்தை முதன்முறையாக வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சீரியல் ஜோடி
சின்னத்திரை சினிமாவில் பிரபலமான ஜோடியாக வலம் வந்தவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்கள் ஒன்றாக இணைந்து விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்து ரசிகர்களை கவந்தனர்.

அப்பொழுது இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால், ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறினார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
குழந்தை புகைப்படம்
இந்நிலையில், இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தது. சமீபத்தில் சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததில் குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தனர்.
தற்பொழுது தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil
மரணத்திற்கு அஞ்சாமல் விமானத்தை மோதச் செய்ய விரும்பினேன்: ஃப்ளைதுபாய் துணை விமானி பரபரப்பு வாக்குமூலம் IBC Tamil