70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..!

Tamil Cinema Marriage Senthil
By Thahir Mar 29, 2023 05:58 AM GMT
Report

70 வயதில் கழுத்தில் மாலையும் கையுமாக கோவிலுக்கு சென்ற காமெடி நடிகர் செந்தில் பிரார்த்தனை செய்தார்.

நீண்ட ஆயுள் வேண்டி குவியும் பக்தர்கள்  

மயிலாடுதுறை மாவட்டம் அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அருள்மிகு அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோவிலில் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்த 60 வயதில் சஸ்டியப்தபூர்த்தி, 70 வயதில் பீமரத சாந்தி 80 வயதில் சதாபிஷேகம், 90 வயதில் கனகாபிஷேகம், 100 வயதில் பூரணாபிஷேகம் உள்ளிட்ட திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிப்பட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

செந்திலுக்கு திருமணம் 

இவ்கோவிலுக்கு சென்ற திரைப்பட நகைச்சுவை நடிகர் செந்தில் தனது 70வது வயதை முன்னிட்டு இன்று பீமரத சாந்தி திருமண விழா நடைபெறவுள்ளது.

Married to comedian Senthil

இதையடுத்த நடிகர் செந்தில் அவரது மனைவி கலைச்செல்வி, மகன்கள் மணிகண்ட பிரபு, மிரிதிபிரபு, மற்றும் குடும்பத்தினருடன் திருமணம் செய்து கொள்வதற்காக கோவிலுக்கு நேற்று வந்துள்ளனர். 

Married to comedian Senthil

இன்று 70வது திருமணம் 

இந்த நிலையில், இரவு கஜபூஜை,கோபூஜை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டு இரண்டுகால யாகசாலை பூஜையில் பங்கேற்றனர். 64 கலசங்கள் வைக்கப்பட்டு முதல் காலயாகசாலை இரவு நடைபெற்றது.

இதை தொடர்ந்து ஆயுள் விருத்தி வேண்டி ஆயுஷ் ஹோமம் நவகிரக ஹோமம் மிருத்யுஞ்சய ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றது.

இதை தொடர்ந்து இன்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று பீமரதசாந்தி என்றழைக்கப்படும் 70வது திருமணம் நடைபெறவுள்ளது.