ஒன் சைடு லவ்... பிரபல சீரியல் நடிகர் தற்கொலை முயற்சி!
மன அழுத்தத்தால் மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
கனா காணும் காலங்கள்
90-கிட்ஸ்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகளில் முக்கியமானது கனா காணும் காலங்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் அப்போது பள்ளி மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது இதில் நடித்த நடிகர் நடிகைகள் பலரும் பெரிய பிரபலங்களாக உள்ளனர். இதில் புலி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ராகவேந்திரன். தற்போது விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி என்ற தொடரில் நடித்து வந்தார்.
ஆதங்கம்
ஆனால் இந்த தொடரில் அவருக்கு சரியான முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்றும், சம்பளம் சரியாக கொடுக்கவில்லை என்றும் கூறி தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
மேலும் சீரியலில் நடிக்கும் பலருக்கும் சரியான காட்சிகள் இல்லை என்றும், சம்பளமும் சரியாக கொடுப்பதில்லை என்றும் தனது ஆதங்கத்தை டிவி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்திய ராகவேந்திரன் புலி, இனி சீரியலில் நடிக்கவே மாட்டேன் என்று அதிரடியான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார்.
தண்ணீர் கேன் டெலிவரி
இதனையடுத்து பார்ட் டைமில் தண்ணீர் கேன் டெலிவரி செய்யும் வேலை செய்து வருவதாக கூறியுள்ள அவர், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
இதனிடையே தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மருத்துவமனையில் இருப்பது போல புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர்,
தற்கொலை முயற்சி
“ஒரே ஒரு ஒன் சைடு லவ். மொத்த பாடி க்ளோஸ். மன அழுத்தத்தால் மொத்த உடம்பும் டேமேஜ் ஆகிவிட்டது” என என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.