விழா மேடையில் இப்படி பண்ணலாமா? ... காதல் கணவரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல சீரியல் நடிகை
பிரபல சீரியல் நடிகை கேப்ரில்லா செல்லஸ் தனது காதல் கணவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நுழைய நிறம் ஒரு காரணமாக வாய்ப்பு மறுக்கப்பட்டு பெரும் சிரமங்களுக்கிடையே சாதித்தவர் கேப்ரில்லா செல்லஸ். நயன்தாராவின் ஐரா படத்தில் நடித்த அவருக்கு அதன்பின் வாழ்க்கையே மாறி விட்டது எனலாம். ஏராளமான படத்தில் துணை ரோல்களில் நடித்த கேப்ரில்லா சன் டிவியில் சுந்தரி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
நிறத்தால் பின் தங்காமல் சாதிக்கும் சுந்தரி என்ற பெண்ணின் சுயமரியாதை கதை தான் இந்த சீரியலின் மையம் என்பதால் பார்வையாளர்களிடையே கேப்ரில்லா பிரபலமாக தொடங்கினார். சமீப காலமாக டிவி சீரியல் டி.ஆர்.பியில் சன் டிவி சீரியல் சுந்தரி 2வது இடத்தை பிடித்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில் நடந்து முடிந்த சன் டிவி குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சுந்தரி தொடருக்காக பேவரைட் ஹீரோயின் விருது கேப்ரில்லா செல்லஸூக்கு வழங்கப்பட்டது. மேடையில் தனது அம்மா மற்றும் அம்மாச்சி பற்றி கேப்ரில்லா பேசிய நிலையில் தனது காதல் கணவரான பற்றி பேசவில்லை.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேடையில் உன் பெயரை பதற்றத்தில் பேச மறந்துவிட்டேன். மன்னித்துக்கொள் என தெரிவிக்க அதற்கு அவரது கணவரோ, உண்மையை தானா சொல்ல முடியும், அம்மா அம்மாச்சி பற்றி பேசியது சரியே என தெரிவித்ததாக கூறியுள்ளார்.இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.