கடத்தப்பட்டு தர்மஅடி வாங்கிய சீரியல் நடிகரின் மகன்..? வெளியான அதிர்ச்சி பின்னணி
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் பிர்லா போஸ் மகன் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிர்லா போஸ்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் பிர்லா போஸ்.

சின்னத்திரையில் நடிப்பது மட்டுமின்றி இவர் அவ்வப்போது படங்களிலும் நடித்து வருகின்றார். ரஜினியின் நடிப்பில் வேகமாக தயாராகி வரும் "வேட்டையன்" படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றார்.
சென்னையில் தனியார் அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கும் இவரின் மகன் திடீரென கடத்தப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்னணி
விஷயத்தின் பின்னணி தெரிந்து கொண்ட பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே தன் வீட்டின் கீழ் தளத்தில் வசித்து வரும் இளைஞர் ஒருவர், பிர்லா போஸ் காரை இடித்ததன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வாக்குவாதம் வலுக்கவே பிரச்சனை இருகுடும்பத்தார் மத்தியிலும் பெரிதாகி இருக்கின்றது. பிரச்சனையின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இருந்துள்ள இளைஞர்,

பிர்லா போஸின் மகனை 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து கடத்தி சரமாரியாக தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
பின்னர் மகனை அவரது வீட்டிலேயே இறக்கிவிட்டு செல்ல, மருத்துவமனை சிகிச்சைக்கு பின், போலீசில் புகாரளித்துள்ளார். 
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    