திடிரென புகுந்த 6 பேர்- வீட்டில் தனியாக இருந்த நடிகைக்கு பாலியல் வன்கொடுமை!
துணை நடிகை ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சின்னத்திரை துணை நடிகை ஒருவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வருகிறார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது உறவினர் வீட்டில் தங்கி சினிமாத் துறையில் துணை நடிகையாக நடித்து வந்தார்.
இந்த நிலையில், அவரது உறவினர் வேலை நிமித்தம் காரணமாக ஹைதராபாத் சென்றுள்ளார்.அந்த சமயத்தில், வர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்த நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார்.
6 பேர்
அதில், தான் தனியாக வீட்டில் இருக்கையில், 6 பேர் கொண்ட மர்ம கும்பலில் முருகேசன் என்பவர் வீட்டின் வெளியில் இரண்டு பேரை காவலுக்கு நிற்க வைத்துவிட்டு, தன்னை வலுக்கட்டாயமான பாலியல் வன்கொடுமை செய்துவிட்டுச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, முருகேசன் (27), கல்யாணகுமார் (28), அருண்பாண்டி (23), மாரியப்பன் (23), பெரிய நம்பி ராஜ் (27), முப்பிடாதி (26) ஆகிய ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் சிக்கியவர்களில் திரைப்பட நடிகர் ஒருவரின் கார் ஓட்டுநர் சிக்கியுள்ளார் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.