செப்டம்பர் மாதத்தில் பிறந்தவரா? குணாதிசயங்கள் இப்படிதான் இருக்கும்
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்களை பற்றி பார்க்கலாம்.
செப்டம்பர்
ஜோதிட சாஸ்திரத்தின் படி, எப்படி ஒரு ராசியைக் கொண்டு ஒருவரின் குணாதிசயத்தைக் கூற முடியுமோ, அதேப் போல் ஒரு மாதத்தைக் கொண்டும் குணாதிசயம் மற்றும் வாழ்க்கை பற்றி அறிய முடியும்.
இதன்படி அதிக பிறப்பு வீதத்தை கொண்ட மாதமான செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்களின் குணாதிசயத்தை பற்றி பார்க்கலாம்.
கண்ணியமானவர்கள்
செப்டம்பரில் பிறந்தவர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். மற்றவர்களின் உணர்வுகளை புண்படாமல் பார்த்துக் கொள்வார்கள். மேலும் இவர்கள் தங்களின் கண்ணியமான மற்றும் அடக்கமான குணங்களால் மற்றவர்களை எளிதில் ஈர்ப்பார்கள்.
சிறந்த வாழ்க்கைத் துணை
செப்டம்பரில் பிறந்தவர்கள் உறவுகளில் சிறந்து விளங்குவார்கள். எந்தவொரு கடினமான சூழ்நிலையிலும் தங்கள் வாழ்க்கைத் துணைக்கு பக்கபலமாக இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, ஈகோவை திருப்திப்படுத்துவதை விட ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பது முக்கியம் என கருதுவார்கள்
திருமண வாழ்க்கை சந்தோஷம் நிறைந்து இருக்கும். மேலும் இவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவையும் பெறுவார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மென்மையான இதயத்துடன் அதிக இரக்ககுணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவார்கள். அதே சமயம் சவாலான சூழ்நிலையில் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருப்பதில் திறமையானவர்கள்.
சகிப்பு தன்மை
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அதிக சகிப்புத்தன்மை உடையவர்கள். இவர்கள் மற்றவர்களின் கருத்துக்கள், விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளை மதிப்பவர்கள். வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். உண்மையின் பக்கம் நின்று அதிகம் வாதிடுவார்கள். இவர்கள் மிகவும் நம்பகமானவர்கள்.
வேலை
இவர்கள் ஒரு விஷயத்தை பற்றி தேடுவதிலும், புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
கற்றலின் மேல் இவர்களுக்கு உள்ள ஆர்வத்தால் தான் சார்ந்திருக்கும் துறைகளில் நிபுணர்களாக உருவெடுப்பார்கள். எந்த வேலையும் சிறப்பாக செய்து முடிக்க மெனக்கெடுவார்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் விரைவில் வெற்றி காண்பார்கள்.
செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் மருத்துவம், சட்டம், எழுத்து, மக்கள் தொடர்பு, ஆலோசகர்கள், ஆராய்ச்சி மற்றும் அரசியல் இந்த துறைகளில் பணி புரிய நிறைய வாய்ப்புள்ளது.