தலைவரே கைதாகிட்டாரு..எம்ஆர்பி ரேட்டுக்கே கொடுங்க - டாஸ்மாக்கில் குடிமகன் வேதனை!
மதுபான கடையில் மதுபிரியர் கருத்து தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
செந்தில் பாலாஜி கைது
அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டதையடுத்து,
அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுபிரியர் வேதனை
இந்நிலையில், ஈரோடி சத்தியமங்கலத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபிரியர் ஒருவர் மது வாங்கிவிட்டு அதற்கான பணம் கொடுக்கும் பொழுது, என் தலைவரே கைதாகிவிட்டார். நானே அந்த துக்கத்தில் தான் சரக்கு அடிக்கிறேன்.
எம்ஆர்பி ரேட்டுக்கே கொடுங்க என கேட்கும் வீடியோ வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.