டாஸ்மாக் கூட்டத்தை கட்டுப்படுத்த மைக் செட் ஒளிபரப்பு
டாஸ்மாக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த ஒரு நபருக்கு நான்கு பாட்டுக்களில் மட்டுமே வினியோகம் என மைக் செட் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முதுகுளத்தூர் கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் டாஸ்மார்க் கடைகளின் நிர்வாகம் சார்பில் மைக் செட் அமைத்து சமூக இடைவெளியுடன் மது பிரியர்களுக்கு நிர்வாகம் சார்பில் அறிவுரை வழங்கி ஒரு நபருக்கு தலா 4 பட்டியல்கள் வீதம் மட்டுமே டாஸ்மார்க் கடை நிர்வாகம் சார்பில் இடைவெளியை பின்பற்றி மதுபாட்டில்களை வாங்கிச் செல்ல அறிவுறுத்தி வினியோகம் செய்தனர்.
முதுகுளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் ஒன்றில் அளவுக்கு அதிகமாக மது பிரியர்களின் கூட்டம் காலை முதல் மாலை வரை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இதையடுத்து டாஸ்மாக் கடை நிர்வாகம் சார்பில் தொடர்ந்து மாலை வரை மைக் செட் அமைத்து மது பிரியர்கள் அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அறிந்து வருமாறு மைக்செட் அமைத்து தொடர்ந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் டாஸ்மாக் நிர்வாக ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் மதுபிரியர் ஒரு நபருக்கு நான்கு பாட்டில்கள் வீதம் வினியோகம் செய்யப்பட்டது.
நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் மதிப்பவர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கு திரும்பத் திரும்ப வந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.