அமித்ஷா வந்து சென்ற மறுநாளில் செந்தில்பாலாஜி கைது - கே.எஸ். அழகிரி சந்தேகம்

V. Senthil Balaji
By Sumathi Jun 14, 2023 10:36 AM GMT
Report

செந்தில்பாலாஜி கைது குறித்து கே.எஸ். அழகிரி சந்தேகம் எழுப்பியுள்ளார்.

செந்தில்பாலாஜி கைது

தமிழ்நாடு மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறையினர் நேற்று முழுவதும் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் வலுப்பெற்று வருகிறது.

அமித்ஷா வந்து சென்ற மறுநாளில் செந்தில்பாலாஜி கைது - கே.எஸ். அழகிரி சந்தேகம் | Senthilbalaji Arrested Ks Alagiri Condemned

மேலும், அமைச்சரின் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரது னைவி மேகலா சட்டவிரோதமாக தன் கணவரை கைது செய்துள்ளதாக கூறி உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதனை விசாரிக்கும் அமர்வின் இரு நீதிபதிகளில் நீதிபதி சக்திவேல் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.எஸ். அழகிரி சந்தேகம் 

தற்போது, செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரத்த நாளங்களின் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரியவந்தது. அதனால், பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அமித்ஷா வந்து சென்ற மறுநாளில் செந்தில்பாலாஜி கைது - கே.எஸ். அழகிரி சந்தேகம் | Senthilbalaji Arrested Ks Alagiri Condemned

இந்நிலையில், "அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயக படுகொலை; அவர் ஒரு அரசியல் தலைவர், அவர் எங்கும் ஓடிவிடவில்லை; அவரை நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?; உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்துசென்ற மறுநாளில் இது நடக்கிறது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.