அண்ணாமலை.. இதுக்கு முதல்ல தைரியம் இருக்கா ? - கே.எஸ்.அழகிரி சவால்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் இடைத்தேர்தலில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிட தைரியம் இருக்கின்றதா? என மிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் செங்கம் குமார் ஏற்பாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் கட்சி கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் பேசிய அழகிரி :
அண்ணாமலைக்கு தைரியம் இருக்கா
தொடர்ந்து பேசிய மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், நான் அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அதிமுகவை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார்கள்.
அவர் நாடாளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா?தனியாக கூட நிற்க வேண்டாம் அதிமுக கூட்டணியோடே அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கின்றதா?
தைரியம் கிடையாது
தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். அதிமுக கூட்டணியில் தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர். இன்றும் அவர்களுக்கு தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் இல்லை. இவ்வளவு தான் அவர்கள் பலம். அவர்களில் யார் நிற்கின்றார்கள் என்பதே தெரியவில்லை. யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்குள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு மோத தைரியம் இல்லை” எனக் கூறினார்.