கும்பலுக்கும், கூட்டத்துக்கும் வித்தியாசம் தெரியுமா? விளாசிய ராஜலட்சுமி செந்தில் கணேஷ்!
அதிமுக மாநாட்டில் ராஜலட்சுமி செந்தில் கணேஷ் தம்பதியினர் கவனம் ஈர்த்துள்ளனர்.
அதிமுக மாநாடு
மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், செந்தில் கணேஷ் ராஜலட்சுமி தம்பதியரின் நாட்டுப்புற பாடல்களும் இடம்பெற்றன.
இதற்கிடையில், பேசிய ராஜலட்சுமி, கும்பலுக்கும் கூட்டத்துக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா என அதிமுகவினரை நோக்கி கேள்வி எழுப்பினார். பின், கும்பல் என்றால் எந்த நோக்கமும் இல்லாமல் கூடுவது. சந்தைகளில் பார்த்தால் தெரியும்.
செந்தில்-ராஜலட்சுமி
ஒவ்வொருவரும் தனித்தனியே ஒவ்வொரு வேலைக்கு வந்திருப்பார்கள். அப்படி கூடுவது கும்பல். ஆனால் அதே நேரத்துல கூட்டம் என்பது எல்லோருமாக சேர்ந்து ஒரே நோக்கத்துக்காக ஒன்றிணைவது. மதுரையில் திரண்டிப்பது வெறும் கும்பல் இல்லை.
மிகப்பெரிய தலைவனுக்கு பின்னால் கூடியிருக்கக் கூடிய கூட்டம் என எடப்பாடி பழனிசாமியை புகழ்ந்தார். இவ்வாறு இருவரும் தொண்டர்களுக்கு ஏற்றவாறு பேஇச் கவனம் ஈர்த்தனர்.