கடன் தான் எல்லாம்; சொந்த ஊருக்கே போக வேண்டியதுதான் - ராஜலட்சுமி வேதனை
தன்னுடைய வாழ்க்கை சூழல் குறித்து பாடகி ராஜலெட்சுமி மனம் திறந்துள்ளார்.
ராஜலெட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடி. இதில் ராஜலெட்சுமி சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், மற்ற துறைகளை விட மீடியா துறையில் உள்ள கணவர், மனைவிகளுக்கு விமர்சனங்கள் எளிதில் வரும்.
கணவன் மனைவிக்குள், அல்லது காதலன் காதலிக்குள் வரும் பிரச்னையை அவர்களுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும். அதை பொதுவெளிக்கு கொண்டு வரக்கூடாது. என் கணவரிடம் கருத்துவேறுபாடு இருந்தால், அதை என் கணவரிடம் தான் விவாதிக்க வேண்டும்.
வாழ்க்கை பக்கம்
அதை விவாதிக்க வேண்டிய இடம் மீடியா இல்லை. நாம் கீழே விழுந்தால், யாராவது அருகில் இருப்பவர்கள், ஏன் விழுந்தீங்க அடிபட்டுடுச்சா?’ என்று கேட்பார்கள், அது போல இதுவும் ஒருவிதமான அனுதாபத்தை தேடும் முயற்சிதான். அது ஒரு போதை மாதிரி. அந்த அளவிற்கு பலவீனமாக நம்மை வைத்திருக்க கூடாது.
வீடு, கார் என எல்லாமே லோன் போட்டு தான் வாங்கியிருக்கோம். கொரோனா வந்த போது நிகழ்ச்சியே இல்லை. கையில் பணமும் இல்லை. அதை கடந்து இப்போ வாழ்ந்துட்டு இருக்கோம். கடன் வாங்கி செலவு பண்றோம்.
அதே மாதிரி ஒரு சூழல் வந்துட்டா என்ன பண்றதுனு அவரிடம் கேட்பேன். கட்ட முடியலைனா பேங்க் எடுத்துக்கும். நமக்கு கிராமத்தில் சொந்தமா ஒரு வீடு இருக்கு. அது போதும் என்று அவர் கூறுவார். இந்த தெளிவு இருக்கு, அது போதும் என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.