ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் - ஜெயக்குமார்
ஆஸ்கர் விருது அடுத்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா.
குற்றச்சாட்டு இருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 30 சதவீதம் அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான்.
இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள்.
அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என்றார்.