பைபாஸ் அறுவை சிகிச்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம் - காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை ஓமந்துாராரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 இடங்களில் அடைப்பு
தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜின் வீடு, தலைமை செயலக அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சுமார் 18 மணிநேரம் சோதனை நடத்தி பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்து அழைத்து செல்லப்பட்டார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரத்த நாளங்களின் 3 இடங்களில் அடைப்பு இருப்பதாக தெரியவந்தது.
காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி
இதையடுத்து ஓமந்துாராரர் அரசு மருத்துமனைக்கு வந்த இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியை தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.