ஜாமீன் பெற செந்தில் பாலாஜி செய்யும் தந்திரம் இது!! நீதிமன்றத்தில் ED அதிரடி!!
இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
8-வது முறையாக நீடிக்கப்பட்ட காவல்
கடந்த ஜூன் மாதம் கைதான அப்போதைய மின்வாரிய துறை அமைச்சர் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து ஜாமீன் கோரி இரண்டு முறை அவர் மனுதாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 13-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு மீண்டும் 8-வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
முன்னதாக செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த வாரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விசாரிக்கப்பட்ட மனுவில், இன்றைய தினம் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த ஸ்டான்லி மருத்துவமனையின் அறிக்கை தொடர்பாக அமலாக்கத்துறை பதில் அளிக்கவும், ஜாமீன் குறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
எல்லாமே நடிப்பு தான்
இந்த நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில் அவருக்கு உடல்நிலை சரியில்லாததாலும், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கு அவருக்கு உரிமை உண்டு என்றும் வைக்கப்பட்ட வாதத்தை மறுத்த அமலாக்கத்துறை விரிவான எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
அதில் செந்தில் பாலாஜி ஆரோக்கியமாக உள்ளதாகவும், ஜாமீன் பெறுவதற்கான ஒரு தந்திரம் மட்டுமே இது என்றும் குறிப்பிடபபட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வெளியே வந்து சாட்சிகளை கலைக்கக்கூடும் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பிரமாண பாத்திரங்கள் அமலாக்கத்துறையிடம் இருக்கும் நிலையில், அதனை எவ்வாறு கலைக்கமுடியும் என செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கமுடியாதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பின் தேதியை ஒத்திவைத்துள்ளார்.