வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விசாரணை; ஒத்துழைக்க மறுக்கும் செந்தில் பாலாஜி - அமலாக்கத்துறை
செந்தில்பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செந்தில்பாலாஜி
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூன் 28ம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
அதனையடுத்து, நீதிமன்றக் காவலை திரும்பப்பெறக் கோரி, செந்தில் பாலாஜி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றக்காவல் ஏற்கனவே வழங்கப்பட்டதால் அந்த மனு செல்லத்தக்கதல்ல எனக்கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஒத்துழைக்க மறுப்பு
இதற்கிடையில், செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்படுத்த முடியாத சூழல் இருப்பதால், வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்த திட்டமிடப்பட்டது.
அப்போது வீடியோ கான்பிரன்ஸ் மூலம், அமலாக்கத்துறை காவல் கோரொய மறு கிடைத்ததா என அமைச்சரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கிடைக்கவில்லை என பதிலளித்துள்ளார். தொடர்ந்து, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.