அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி

V. Senthil Balaji Madras High Court
By Thahir Jun 15, 2023 11:32 AM GMT
Report

அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதிகள் அதிரடி உத்தரவு 

  • அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடந்தது.

HC allows transfer of Senthil Balaji to private hospital

  • அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
  • அந்த தீர்ப்பில், ஓமந்துாரார் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது .
  • சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவர்கள் குழுவும் ஆராயலாம்.
  • செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு.
  • நீதிமன்ற காவலில் அரசு மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்கிற வாதத்தை ஏற்க முடியாது.
  • காவேரி மருத்துவமனை சிகிச்சை செலவுகளை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும்.
  • ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ஜுன் 22 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
  • மேலும் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறையினர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.