மீல்ஸ் வேண்டாம்; அதை கொடுங்க.. அதிகாரிகளிடம் ஆசையாய் கேட்ட செந்தில் பாலாஜி?
அதிகாரிகளிடம் செந்தில் பாலாஜி வேறு உணவை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜியை 5 நாட்களுக்கு காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாகக்த்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவனில் உயரதிகாரிகள்
தங்கும் 3 ஆவது மாடியில் உள்ள அறையில் அவரை தங்கவைத்தனர். மேலும், ஓய்வு எடுங்கள் என்று கூறி பாலும் பழமும் கொடுத்துவிட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் புறப்பட்டுள்ளனர்.
விசாரணை
2ம் நாளாக காலை 9 மணி முதல் 12 மணி வரை முறைப்படி அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் விசாரணை தொடங்கியது. தொடர்ந்து, ஷிப்ட் முறையில் இரண்டு இ.எஸ்.ஐ மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து வருகின்றனர். மதிய உணவுக்காக மினி மீல்ஸ் உணவை அவருக்கு கொடுத்த நிலையில், எனக்கு மினி மீல்ஸ் வேண்டாம் தயிர் சாதம் வேண்டும் எனக் கேட்டதால்,
பிரபல சைவ ஹோட்டலில் இருந்து தயிர் சாதம் வாங்கி அமலாக்கத்துறை அதிகாரிகள் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.