தீவிர சிகிச்சையில் செந்தில் பாலாஜி.. என்னாச்சு? - மருத்துவர்கள் தகவல்!
செந்தில் பாலாஜி திடீர் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறை
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு சிறை தண்டனை நீடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மருத்துவர்கள் தகவல்
இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு இதயவியல் பிரிவு தலைவர் மனோகரன் தலைமையிலான குழு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் பித்தப்பையில் கல் இருப்பது உறுதியானது.
பித்தப்பை கல்லை கரைப்பதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர். மேலும், இவருக்கு ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், குடல் புண் காரணமாக சிறப்புக் குழு பரிசோதனை மேற்கொண்டதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.