மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் - மீண்டும் புழல் சிறைக்கு புறப்பட்டார் செந்தில் பாலாஜி!

V. Senthil Balaji Tamil nadu
By Jiyath Oct 09, 2023 11:00 AM GMT
Report

திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் - மீண்டும் புழல் சிறைக்கு புறப்பட்டார் செந்தில் பாலாஜி! | Hospital Discharge Senthil Balaji Left To Puzhal

ஏற்கெனவே செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் வழங்கக் கோரி அவரது தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பலமுறை மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஆனால் அவரின் ஜாமீன் மனு தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில், நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் புழல் சிறையிலேயே இருந்து வருகிறார்.

டிஸ்சார்ஜ்

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 6 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிறை மருத்துவர்கள் அவரை பரிசோத்தித்த நிலையில், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினர்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் - மீண்டும் புழல் சிறைக்கு புறப்பட்டார் செந்தில் பாலாஜி! | Hospital Discharge Senthil Balaji Left To Puzhal

இதனையடுத்து அவரை சிறை அதிகாரிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு செந்தில் பாலாஜிக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு சிறப்பு மருத்துவக்குழுவினரும் உடல் நிலையை கண்காணித்தனர். தற்போது செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து இன்று பிற்பகலில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறைக்கு திரும்பினார். அவரை சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.